தொடர் ஊரடங்கு? – அரசு ஆராய்வு

0101010 4 1

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் தொடர்பில் அரசு ஆராய்ந்து வருகிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை நடைமுறையிலுள்ளது. நடைமுறையிலுள்ள ஊரடங்கு சட்டத்தை 13 ஆம் திகதியுடன் முடிவுக்கு கொண்டுவர அரசு ஆராய்ந்து வருகிறது.

இந்த ஊரடங்கு காரணமாக நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது, கல்விச் செயற்பாடுகள் உட்பட அனைத்து முக்கியமான சேவைகளும் பின்னடைவை சந்தித்துள்ளன,

இந்த நிலையில், அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தில் தளர்வுகளை ஏற்படுத்தி அத்தியாவசிய சேவைகள் உட்பட முக்கிய சேவைகளை சுகாதார கட்டுப்பாடுகளுடன் மேற்கொள்ள அனுமதியளிப்பது குறித்தும் ஆராயப்பட்டு வருகின்றது.

இதேவேளை விரைவில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது – என தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version