தொடர் மழை – 33,823 யாழில் பேர் பாதிப்பு

Rain 4

தொடர் மழை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 10 ஆயிரத்து 188 குடும்பங்களை சேர்ந்த 33 ஆயிரத்து 823 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலையால் ஒரு வீடு முழுமையாகவும், 110 வீடுகள் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளன என ரி.என்.சூரியராஜா மேலும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு தற்போது 6 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 96 குடும்பங்களை சேர்ந்த 308 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version