தேர்தலை தடுக்க கூட்டு சதி!!

sajith 3 2

இந்நாட்டிலுள்ள பெரும்பான்மையான உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் பதவிக் காலம் இவ்வருடம் மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ள போதிலும், தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை மூடி மறைக்க அரசாங்கம் தொடர்ந்தும் தேர்தலை ஒத்திவைக்க கடுமையாக முயற்சித்து வருவதோடு, தேர்தலை நடத்தாமல் தடுக்க இதுவரை சுமார் 22 விதமான கூட்டு சதிகளை அரசாங்கம் கையாண்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்த நிலையில், தேர்தலை நடத்துவதற்கு நிதியை வழங்காமல் இருப்பதுதான் அரசாங்கத்தின் கடைசி முயற்சியாகத் தெரிவதோடு, இது ஜனநாயகத்தின் நசுக்கும் விடயமாகவும் அமைந்துள்ளது.

இதனை வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் இன்றைய பாராளுமன்ற அமர்வில் பல கேள்விகளை முன்வைத்தார்.

#SriLankaNews

Exit mobile version