எரிபொருள் விலையில் குழப்பம்!

eee

எரிபொருள் விலையை தற்போதைய சூழ்நிலையில் அதிகரிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச, வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு கட்டளை பிறப்பித்துள்ளார்.

மொட்டு கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது.

இதன்போது உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், குறைந்த விலைக்கு உள்நாட்டில் அதனை விநியோகித்தால் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் எனவும் விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சரான கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு பதிலளிக்கையிலேயே தற்போதைய சூழ்நிலையில் விலை அதிகரிப்பு வேண்டாம் எனவும், நஷ்டத்தை அரசாங்கம் பொறுப்பேற்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version