tamilni 37 scaled
இலங்கைசெய்திகள்

யாழ். நகரில் உள்ள ஆலயமொன்றில் கைகலப்பு: குருக்கள் மூவர் கைது

Share

யாழ். நகரில் உள்ள ஆலயமொன்றில் கைகலப்பு: குருக்கள் மூவர் கைது

யாழ்ப்பாணம் (Jaffna) வீரமாகாளி அம்மன் ஆலயத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குருக்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆலய மகோற்சவத்தின் போது ஏற்பட்ட கைகலப்பு காரணமாகவே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது நடவடிக்கை தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஆலய மகோற்சவத்தினை நடாத்திய குருக்களின் நெருங்கிய உறவு முறைக்காரர் ஒருவர் வெளிநாட்டில் காலமான நிலையில் அவர் மகோற்சவ திருவிழாக்களை நடாத்தியதாக குருக்களுடன் சிலர் முரண்பட்டுள்ளனர்.

அதன் போது இவர்களிடையே கைக்கலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அது தொடர்பில் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , எதிராளிகளான மூவரையும் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து இருந்தனர்.

அவர்கள் விசாரணைக்கு செல்லாத காரணத்தால் , காவல்துறையினர் அவர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

யாழ். நகரில் உள்ள ஆலயமொன்றில் கைகலப்பு: குருக்கள் மூவர் கைது | Conflict Nallur Veeramakali Amman Kovil In Jaffna

குறித்த ஆலய குருக்கள் பரம்பரையினருக்கு இடையில் நீண்ட காலமாக ஆலயம் தொடர்பில் முரணப்பாடு காணப்பட்டு வருகிறது.

இது தொடர்பில் நீதிமன்றில் வழக்குகளும் உள்ளன. இந்நிலையில் கடந்த மாதம் ஆலய மகோற்சவம் ஆரம்பமாகி , கடந்த வியாழக்கிழமை தேர் திருவிழா இடம்பெற்று , நேற்றைய தினம் பூங்காவன திருவிழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...