24 660a1ed86c73c
இலங்கைசெய்திகள்

அரச பேருந்தில் மோசடி: நடத்துனர்கள் பணி இடைநிறுத்தம்

Share

அரச பேருந்தில் மோசடி: நடத்துனர்கள் பணி இடைநிறுத்தம்

சில பேருந்து பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்காமல் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் சுமார் 30 அரச பேருந்து நடத்துனர்கள் ஒரு வார காலத்திற்கு பணி இடைநிறுத்தம் செய்யப்படவுள்ளதாக அதன் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், அடிக்கடி 30, 50 ரூபாய் கொடுத்து பயணிக்கும் பயணிகளுக்கு சில நடத்துனர்கள் பயண சீட்டு வழங்காமல் இருப்பது தெரியவந்துள்ளது.

பேருந்துகளில் சீரற்ற நடமாடும் சோதனைகள் மேற்கொள்ளப்படும் போது சில அரச பேருந்து டிப்போக்களின் நாளாந்த வருமானம் ஒரு இலட்சம் ரூபாவிலிருந்து மூன்று இலட்சம் ரூபாவாக உயர்வதாகவும் கூறியுள்ளார்.

நாடளாவிய ரீதியில் 107 அரச டிப்போக்கள் உள்ளதாகவும், மேற்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள டிப்போக்களில் பணிபுரியும் சில ஊழியர்களே இந்த மோசடியை பெரும்பாலும் செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரச பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் பயணம் தொடர்பான பணத்தை கொடுத்து நடத்துனரிடம் தவறாமல் பயணசீட்டை கேட்க வேண்டும் என்றும், அரச பேருந்துகளில் பயணசீட்டு இல்லாமல் பயணம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்றும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...