இலங்கைசெய்திகள்

விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகை : முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

Share
26
Share

விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகை : முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையினால் ஆறு வகையான பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களுக்காக அரசாங்கம் அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகை தங்களுக்கு போதுமானதல்ல என கமநல அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அத்துடன் காலநிலை அனர்த்தங்களால் பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை அரசாங்கம் உரிய முறையில் மதிப்பீடு செய்ய வேண்டும் எனவும் அந்த அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மொத்தமாக சுமார் 338,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன்படி, நெல், சோளம், உருளைக்கிழங்கு, சோயா, மிளகாய் மற்றும் பெரிய வெங்காயம் போன்ற பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்காக ஏக்கர் ஒன்றுக்கு 40,000 ரூபாவுக்கு மேற்படாத தொகை இழப்பீடாக வழங்கப்படும் என விவசாய பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன (Namal Karunarathna) நேற்று முன்தினம் (29) அறிவித்தார்.

எனினும், குறித்த இழப்பீட்டுத் தொகை தமக்கு போதுமானதாக அமையாது என கமநல அமைப்புகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சீரற்ற காலநிலையினால் தங்களது பயிர்ச் செய்கைகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளதுடன் அதற்காக அரசாங்கம் உரிய வகையில் நட்டஈடு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...