விவசாயிகளுக்கு இழப்பீடு!!

photo 1595974482597 4b8da8879bc5

2021-2022 ஆம் ஆண்டுக்கான பெரும்போக செய்கையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான 657 மில்லியன் ரூபா இழப்பீட்டு தொகையை விவசாயம் மற்றும் கமநல காப்புறுதி சபையூடாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வறட்சி, வௌ்ளம் மற்றும் காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்திற்கொண்டு விவசாயிகளுக்கான இழப்பீட்டு தொகையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வளவள பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் 42,934 ஏக்கரில் பாதிக்கப்பட்ட 31,613 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளது.

#SriLankaNews

Exit mobile version