tamilni 66 scaled
இலங்கைசெய்திகள்

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு மில்லியன் ரூபா இழப்பீடு

Share

கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி மாத்தறை – வெலிகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் குடும்பத்துக்கு 4.2 மில்லியன் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த உபுல் சமிந்த என்ற அதிகாரியின் குடும்பத்துக்கே இவ்வாறு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இந்த இழப்பீட்டு தொகையில் ஜனாதிபதி செயலகம் 2.5 மில்லியன் ரூபாயையும், இலங்கை பொலிஸ் திணைக்களம் 1.7 மில்லியன் ரூபாயையும் வழங்கியுள்ளன.

வெலிகம விருந்தகம் ஒன்றுக்கு அருகாமையில் பொலிஸார் மேற்கொண்ட யுக்திய சோதனையின் போதே உபுல் சமிந்த துப்பாக்கிச் சூட்டுக்கு இழக்காகி உயிரிழந்ததுடன் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்தார்.

இவ்வாறு கடமையாற்றிய நிலையில் உயிரைத் தியாகம் செய்த பொலிஸ் அதிகாரியின் இழப்பிற்காக அவரின் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...