கட்டுநாயக்கவில் மெத்தையால் ஏற்பட்ட பரபரப்பு

tamilni 160

கட்டுநாயக்கவில் மெத்தையால் ஏற்பட்ட பரபரப்பு

கட்டுநாயக்க பிரதேசத்தில் மெத்தையால் ரயில் ஒன்று சுமார் ஒரு மணிநேரம் நிறுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ரயில் பாதையில் உலர்த்துவதற்காக போடப்பட்டிருந்த மெத்தையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் ஒன்று நேற்று காலை இவ்வாறு நிறுத்தப்பட்டது.

ரயில் பாதைக்கு அருகில் வசிப்பவர் ஒருவர் உலர வைப்பதற்காக ரயில் பாதையில் போடப்பட்டிருந்த மெத்தை ரயிலில் மோதியதில் ரயிலின் சிறிய பாகம் உடைந்துள்ளது.

இதனை சீரமைக்க சுமார் ஒரு மணி நேரம் ரயில் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Exit mobile version