யாழ்ப்பாணம்(Jaffna) வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் பொதுக் காணி ஒன்றை அத்துமீறி சுவீகரித்துள்ளமை தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் குறித்த இடத்தை இன்று(25) நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.
கட்டைக்காடு கிராம மக்களின் பொதுத் தேவைக்கென ஒதுக்கப்பட்டுள்ள காணி அத்துமீறி சுவீகரிக்கப்பட்டுள்ளமை சட்டத்திற்கு முரனான செயல் என குறிப்பிட்ட சுமந்திரன் தேவையேற்படின் மேலதிக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு உதவுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், கட்டைக்காடு கிராம அபிவிருத்தி சங்கத்தால் இன்று ஒழுங்குபடுத்தப்பட்ட விசேட கூட்டத்தில் அத்துமீறி காணியை சுவீகரித்த நபருக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டு அவரை குறித்த காணியில் இருந்து வெளியேற்ற தீர்மானம் எடுக்கப்பட்டமையும் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.