9 29
இலங்கைசெய்திகள்

யாழில் அத்துமீறி சுவீகரிக்கப்பட்ட பொதுக்காணி : சுமந்திரன் நேரடி விஜயம்

Share

யாழ்ப்பாணம்(Jaffna) வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் பொதுக் காணி ஒன்றை அத்துமீறி சுவீகரித்துள்ளமை தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் குறித்த இடத்தை இன்று(25) நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.

கட்டைக்காடு கிராம மக்களின் பொதுத் தேவைக்கென ஒதுக்கப்பட்டுள்ள காணி அத்துமீறி சுவீகரிக்கப்பட்டுள்ளமை சட்டத்திற்கு முரனான செயல் என குறிப்பிட்ட சுமந்திரன் தேவையேற்படின் மேலதிக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு உதவுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், கட்டைக்காடு கிராம அபிவிருத்தி சங்கத்தால் இன்று ஒழுங்குபடுத்தப்பட்ட விசேட கூட்டத்தில் அத்துமீறி காணியை சுவீகரித்த நபருக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டு அவரை குறித்த காணியில் இருந்து வெளியேற்ற தீர்மானம் எடுக்கப்பட்டமையும் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

Share
தொடர்புடையது
world 72
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெனியாய கல்வி வலயப் பள்ளிகள் நாளை மீண்டும் திறப்பு: சுகாதார நடவடிக்கைகள் நிறைவு

தெனியாய கல்வி வலயத்தில் வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த நான்கு முக்கிய பாடசாலைகளும்...

world 70
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை – பெலாரஸ் உறவுகளில் புதிய மைல்கல்: அமைச்சர் விஜித ஹேரத் மின்ஸ்க் பயணம்

பெலாரஸ் வெளிவிவகார அமைச்சர் மாக்சிம் ரைசென்கோவின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில், இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

world 69
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெலிக்கடை சிறையில் கைதி உயிரிழப்பு: கட்டிடத்திலிருந்து விழுந்ததாக தகவல்

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர், நேற்று (மே 11) சிறை வளாகத்தில்...

world 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏர்பஸ் ஊழல் விசாரணை: லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் மஹிந்த ராஜபக்ஷ வாக்குமூலம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் 2 மில்லியன் அமெரிக்க டாலர் லஞ்சம்...