கல்லறை முன் கனத்த இதயத்துடன் ஈச்சங்குள துயிலுமில்லத்தில் விழுந்த கண்ணீர் துளிகள் !
வவுனியாவில் பிரதான மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள ஈச்சங்குளம் பகுதியில் கனத்த இதயம் கொண்ட உணர்வெழுச்சியுடன் உறவுகளினால் மாவீரர் நாள் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதன் போது மணி ஒலிக்கப்பட்டு, ஈச்சங்குளம் துயிலும் இல்லத்தின் பிரதான ஈகைச்சுடரினை இரு.மாவீரர்களின்.தாயாரான பாலசிங்கம் பாக்கியத்தினால் ஏற்றி வைக்கப்பட்டது.
இதனையடுத்து நினைவேந்தலில் கலந்து கொண்ட மாவீரர்களின் பெற்றோர்களால் சுடர் ஏற்றி நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
கண்ணீர் மல்க, மலர் தூவி, சுடரேற்றி உணர்வு பூர்வமாக உயிரிழந்த வீரர்களுக்கும் தமது உறவுகளுக்கும் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
இதில் பல ஆயிரக்கணக்கான பெற்றோர்கள், உறவினர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.