கொழும்பில் 7 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை!

நீர் விநியோகம் தடை

கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று இரவு 10 மணி முதல் 7 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை இதனை அறிவித்துள்ளது.

இதன்படி, எதுல்கோட்டே, பிட்டகோட்டே, பெத்தகான, மிரிஹான, மாதிவெல, தலப்பத்பிட்டிய, உடாஹமுல்ல, எம்புல்தெனிய மற்றும் நுகேகொடை உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு 1,2,3,4,7,8,9,10,11 மற்றும் கடுவலை ஆகிய பகுதிகளில் இன்று இரவு 9 மணி முதல் நாளை காலை 6 மணிவரையான 9 மணித்தியாலங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version