கத்தியால் குத்தப்பட்டுக் கொலை
அரசியல்இலங்கைசெய்திகள்

கொழும்பில் பட்டப்பகலில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை!

Share

கொழும்பு, கொட்டாஞ்சேனை – ஆமர் வீதி அடுக்குமாடிக் குடியிருப்புத் தொடருக்கு அருகில் நபர் ஒருவர் இன்று பகல் கத்தியால் குத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் படுகாயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ஆமர் வீதி, அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 42 வயதுடையவர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரைக் கைதுசெய்வதற்கான மேலதிக நடவடிக்கைகளை கொட்டாஞ்சேனைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...