கொழும்பு – கோட்டைப் பகுதியில் உள்ள உலக வர்த்தக மையத்தை அண்மித்த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸாரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைப் பதவி விலகுமாறு கோரி காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் அறவழிப் போராட்டத்தின் 50ஆவது நாள் இன்றாகும். இதையொட்டி கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து காலிமுகத்திடல் வரை மாபெரும் மக்கள் பேரணி இன்று மாலை முன்னெடுக்கப்பட்டது.
இதில் பங்குபற்றிய ஒரு பகுதியினர் உலக வர்த்தக மையத்தை அண்மித்த பகுதியில் ஜனாதிபதிக்கு எதிராகப் கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட வேளையே பொலிஸாரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
#SriLankaNews
Leave a comment