இளம் பெண்ணின் விபரீத முடிவு!

இளம் பெண்ணின் விபரீத முடிவு!

இளம் பெண்ணின் விபரீத முடிவு!

இளம் பெண்ணின் விபரீத முடிவு!

யக்கல – போகமுவ பிரதேசத்தில் உள்ள வீட்டுத்தொகுதியின் நான்காவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இளம் தாயின் மரணம் தொடர்பில் 7 வயது சிறுமி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

யக்கல பகுதியில் வீட்டுத்தொகுதியில் வசித்து வந்த 31 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான சதுரிகா மதுஷானி இவ்வாறு உயிரிழந்திருந்தார்.

இவ்வாறு உயிரிழந்த பெண் தனது கணவர் மற்றும் ஏழு வயது மகளுடன் ஐந்து மாடி கட்டிடத்தின் நான்காவது மாடியில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார்.

குறித்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் எழுந்ததன் காரணமாக உயிரிழந்த பெண்ணின் கணவரை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பெமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் சில காலமாக அடிக்கடி குடும்ப தகராறு நிலவியமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் சம்பவ தினத்தன்று இரவு வாக்குவாதம் ஏற்பட்டதாக ஏழு வயது மகள் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இந்நிலையில், இது தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து பெமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version