யாழ் நிலா தொடருந்து
இலங்கைசெய்திகள்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு யாழ் நிலா தொடருந்து சேவை

Share

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு யாழ் நிலா தொடருந்து சேவை

கல்கிஸ்சையிலிருந்து காங்கேசன்துறை வரையிலான ‘யாழ் நிலா‘ எனும் அதி சொகுசு புதிய தொடருந்து சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த தொடருந்து சேவையானது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாவது, வார இறுதி நாட்களில் செயற்படவுள்ள இந்த தொடருந்து சேவையானது, வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணிக்கு கல்கிஸ்சை தொடருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு சனிக்கிழமை அதிகாலை 6 மணிக்கு காங்கேசன்துறை தொடருந்து நிலையத்தை சென்றடையவுள்ளயது.

அத்துடன் காங்கேசன்துறையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை அதிகாலை 6 மணிக்கு கல்கிஸ்ஸை தொடருந்து நிலையத்தை வந்தடையும்.

இந்த அதி சொகுசு தொடருந்தில் உணவகங்கள் உள்ளிட்ட சகல வசதிகளும் உள்ளது.

தொடருந்தின் டிக்கெட்டுகளை முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும்.

‘யாழ் நிலா’ தொடருந்தில் முதல் வகுப்பு ஆசனமொன்றுக்கு 4,000 ரூபாவும், இரண்டாம் வகுப்பு ஆசனமொன்றுக்கு 3,000 ரூபாவும் கட்டணம் அறவிடப்படவுள்ளது.

மூன்றாம் வகுப்பு ஆசனமொன்றுக்கு 2,000 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.

இந்த தொடருந்து சேவை நல்லூர் திருவிழாவை இலக்காகக் கொண்டு எதிர்வரும் ஆகஸ்ட் 18 ஆம் திகதி முதல் தினமும் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...