tamilni 262 scaled
இலங்கைசெய்திகள்

சிங்கள மக்கள் மத்தியில் தவறான கருத்துகள்

Share

சிங்கள மக்கள் மத்தியில் தவறான கருத்துகள்

சிங்களவர்களை தமது பகுதிகளிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக தவறான கருத்துகள் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (21.10.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், கடந்த இரண்டு மூன்று நாட்களாக சில பிக்குமார் இந்த நாட்டின் ஜனாதிபதியையும், என்னையும் குறைகூறி ஊடக அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர்.

அது தொடர்பில் தெளிவுப்படுத்த வேண்டிய கடமை எனக்கு உள்ளது. இந்த நாட்டில் அரசாங்கத்தின் இடத்தை சிங்கள, தமிழ், கிறிஸ்தவ அல்லது முஸ்லிம் மக்கள் யாராக இருந்தாலும் அரச இடத்தை கைப்பற்றவோ சட்டவிரோதமாக பிடிக்க முயற்சித்தாலும் கண்டிப்பாக அவர்கள் மீது ஒரே விதமாகவே சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆனால் தற்போது பிரச்சாரம் செய்கிறார்கள், நாங்கள் சிங்களவர்கள் எங்களை எங்களுடைய இடத்திலிருந்து வெளியே போகச் சொல்கிறார்கள் என்று. அது முற்றிலும் தவறான விடயமாகும்.

தனியார் இடங்களாக இருந்தால் கண்டிப்பாக அரசாங்கம் அதில் தலையிடப் போவதில்லை. எனினும் அரசாங்க இடத்திற்குள் யார் நுழைந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மதங்களை காட்டி இதனை பிரச்சினைப்படுத்துகிறார்கள். என்னைப் பொறுத்த வரையில் இது நாகரீகமான செயல் கிடையாது என செந்தில் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...