tamilni 286 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை துறைமுகத்தை நோக்கி படையெடுக்கும் கப்பல்கள்

Share

செங்கடலில் ஹவுதி போராளிகளின் தாக்குதல்கள் காரணமாக கொழும்பு துறைமுகம் நோக்கி கப்பல்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

துறைமுகத்தின் மூன்று முனையங்களிலும் செயற்பாடுகளை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு துறைமுகத்தின் கேந்திர அமைப்பு காரணமாக மத்திய கிழக்கு, தெற்காசியா மற்றும் கிழக்கு ஆசியாவை நோக்கி இலகுவாக சென்றடைய முடியும் என துறைமுக அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

தென்ஆபிரிக்காவை கடந்து செல்லும் கப்பல்கள் சந்திக்கும் முதலாவது துறைமுகம் கொழும்பு துறைமுகம் என்பதனால் நெரிசல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆண்டில் கடந்த ஆண்டை விடவும் அதிகளவு கொள்கலன்கள் கையாளப்படும் என துறைமுக அதிகாரசபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இதேவேளை ஹவுதி போராளிகள் அமெரிக்க கப்பல் ஒன்றின் மீது மீண்டும் தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
6 15
இலங்கைசெய்திகள்

முதலீட்டாளர்களுக்கான வரிச் சலுகைகள் தொடர்பில் IMF முக்கிய நிபந்தனை

இலங்கையுடன் விரிவான கடன் திட்டத்தில் ஈடுபட்டுள்ள சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு கடன் வழங்குவதற்கு மற்றொரு...

5 14
உலகம்செய்திகள்

ரஸ்யாவுக்கு எதிராக பிரித்தானியா விடுத்துள்ள பாரிய தடை

பிரித்தானியா, ரஷ்யாவிற்கு எதிராக வரலாற்றிலேயே மிகப்பாரிய தடைகளை அறிவித்துள்ளது. இதற்கமைய, ரஷ்யாவிற்காக இரகசியமாக இயங்கும் எண்ணெய்...

4 13
உலகம்செய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போரில் புதிய திருப்பம்.. பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

இந்தியாவுடன் ஆக்கபூர்வமான ராஜதந்திரத்தில் ஈடுபட பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் இன்று...

3 14
உலகம்செய்திகள்

மீண்டும் மீண்டும் வன்முறையில் பாகிஸ்தான்.. இந்தியா முன்வைக்கும் கடுமையான குற்றச்சாட்டு

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று மாலை மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறுவதாக...