வழமைக்கு திரும்பும் கொழும்பு – கண்டி ரயில் சேவைகள்!

29b08348e1b7d8e53058629b9458da9d

கொழும்பு – கண்டி ரயில் சேவைகள் இன்று மீண்டும் ஆரம்பமாகிறது என புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில்  தெரிவிக்கையில்,  சீரற்ற வானிலையால் மலையக ரயில் பாதையில் சில இடங்கள் தாழிறங்கியிருந்தன.

அத்தோடு, பதுளையிலிருந்து நானுஓயா வரையில் பல இடங்களில் ரயில் பாதைக்கு ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக இடைநிறுத்தப்பட்ட கொழும்பு – கண்டி ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

புகையிரத பாதைகள்  தற்போது சீரமைக்கப்பட்டுள்ளன.

றம்புக்கனை புகையிரத நிலையத்தில் தண்டவாளங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு சீர் செய்யப்பட்டுள்ளன.  இதன் காரணமாக இன்று தொடக்கம் ரயில் சேவையை மேற்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version