11 3 scaled
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையில் தொடரும் துப்பாக்கிச்சூடு

Share

தென்னிலங்கையில் தொடரும் துப்பாக்கிச்சூடு

அம்பலாங்கொடை மற்றும் பிடிகல பகுதிகளில் நேற்றிரவு இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.

இரு குழுக்களால் இந்த துப்பாக்கி பிரயோகங்கள் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வெளிநாட்டில் மறைந்திருந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் உத்தரவின் பேரில் இரு வாடகை கொலையாளிகளால் நடத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த இரண்டு தாக்குதல்களும் T-56 ஆயுதத்தை பயன்படுத்தி நடத்தப்பட்டதுடன், இரண்டு தாக்குதல்களிலும் ஒரே கொலையாளிகள் ஈடுபட்டுள்ளதாக சிசிடிவி காணொளி காட்சிகள் மூலம் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த தாக்குதலின் பின்னர், வாடகைக் கொலையாளிகள் 25 கிலோ மீற்றருக்கும் அதிகமான தூரத்தைக் கடந்து அம்பலாங்கொட பிரதேசத்திற்கு வந்து, இரவு 9.30 மணியளவில் தமது இரண்டாவது தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இரவு வேளைகளில் துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதால், சிசிடிவி காணொளி காட்சிகளும் தெளிவாக தெரியவில்லை என விசாரணைகளை முன்னெடுத்து வரும் தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

அம்பலாங்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் போதைப்பொருள் தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், பிடிகல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம், நபர் ஒருவரை கொலை செய்தமைக்கான பழிவாங்கும் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களிலும் 4 பேர் உயிரிழந்ததுடன், காயமடைந்த 6 பேர் வைத்தியசாலை சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிடிகல – குருவல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அவர்களில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் உயிரிழந்திருந்ததுடன்,  அவர் வர்த்தக நிலையமொன்றில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வந்திருந்த ஒருவரென தெரியவந்துள்ளது.

குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பலாங்கொடை கலகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் காயமடைந்து பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வர்த்தக நிலையத்தில் பணியாற்றிய ஊழியரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், சம்பவத்தில் இலக்கு வைக்கப்பட்ட நபரும் வர்த்தக நிலைய உரிமையாளரின் 21 வயதுடைய மகனும் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், வர்த்தக நிலையத்தில் இருந்த மேலும் 3 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...

eb shok
இலங்கை

மின்சாரம் தாக்கியதில் ஒன்பது மாத குழந்தையின் தாய் பலி.

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி பகுதியில் கிணற்றில் வீழ்ந்த கோழிக்குஞ்சை மீட்க முற்பட்ட தினேஷ் நேசமலர்...

wether
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் நாடு முழுவதும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

இலங்கையினை பொறுத்தவரை இன்று பகல் வேளையில் மனித உடலினால் உணரக்கூடிய எச்சரிக்கை மட்டத்தில் அதிகரித்த வெப்பநிலை...

Pastor Jerome
இலங்கை

அநுரவை புகழ்ந்த சர்ச்சையில் சிக்கிய போதகர்.

மிராக்கல் டோம் தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாட்டு நிகழ்வொன்றின் போது, பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்த, ஜெரோம் பெர்னாண்டோ...