11 18
இலங்கைசெய்திகள்

கொள்கலன் விடுவிப்பு மோசடி! அநுர தரப்பு மீது விமல் பகிரங்க குற்றச்சாட்டு

Share

கொள்கலன் விடுவிப்பு மோசடியில் கிடைக்கப்பெற்ற பணம் எவ்வளவு என்பது தொடர்பில் கேள்வி எழுவதாகவும், அதில் கிடைக்கப்பெற்ற இலாபம் அநுரகுமாரவுக்கா? அல்லது வசந்த சமரசிங்கவுக்கா? சென்றடைந்தது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணி கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

அரிசி இறக்குமதியிலும் தற்போதைய அரசாங்கம் மோசடி செய்துள்ளனர். இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலாே அரிசிக்குக்கு 60 ரூபா வரி அறவிட்டால், இறக்குமதி செய்பவருக்கு எந்தளவு இலாபம் மீதமாகிறது?

அநுரகுமாரவுக்கா அல்லது வசந்த சமரசிங்கவுக்கா? கொள்கலன் விடுவிப்பு மோசடியில் கிடைக்கப்பெற்ற பணம் எவ்வளவு என யாருக்கும் தெரியாது.

அண்மைக்காலத்தில் இடம்பெற்ற பாரிய பண மாேசடி இதுவாகும்.

மற்றவர்களின் குறைகளை தேடிக்கொண்டும், கதைத்துக்கொண்டும் இருக்கும் கிணற்றடியில் கலந்துரையாடும் ஒரு அரசாங்கமாகும்.

இதனைத் தவிர 7 மாதங்களில் இவர்கள் எதை செய்திருக்கிறார்கள் என கேட்கிறேன்.

அதனால் மக்கள் இவர்கள் மீது பாரிய நம்பிக்கை வைத்தே வாக்களித்தார்கள். வணங்கப்போன விகாரை தலையில் இடிந்து விழுந்தால் ஏற்படுகின்ற கோபம், வேறு ஒரு இடத்தில் இடிந்து விழுவதைவிட அதிகமாகும்.

மேலும், உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அதிகமான சபைகளுக்கு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை.

இந்நிலையில் யார் ஆட்சி செய்தாலும் அவர்களுக்கு ஏனைய கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது. அதனால் அவ்வாறன சபைகளை ஆளும் அரசாங்கம் ஆட்சி செய்வதாக இருந்தால், அவர்களுக்கு ஒருபோதும் ஆதரவளிக்கப்போவதில்லை.

அதேநேரம் எதிர்க்கட்சியில் ஏதாவது கட்சி ஆட்சி அமைப்பதாக இருந்தால், அவர்களுக்கு நிபந்தனையும் ஆதரவளிக்க தயாராக இருக்கிறோம்.

Share
தொடர்புடையது
world 226
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 225
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 224
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திக்வெல்ல வெவுருகன்னல விகாரையில் பழங்கால வாள் திருட்டு: பொலிஸார் தீவிர விசாரணை!

மாத்தறை, திக்வெல்ல பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெவுருகன்னல புடு ராஜ மகா விகாரையின் அருங்காட்சியகத்திலிருந்து...

world 223
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இளம் பெண் கொடூரக் கொலை: கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பரிதாப உயிரிழப்பு!

ஹட்டன், வெலியோயா எஸ்டேட் பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய இளம் பெண் ஒருவர், இன்று...