நாடாளுமன்ற நடவடிக்கைகளை இடையூறு இன்றி முன்னெடுத்துச் செல்வதற்காக அதனைச் சுற்றியுள்ள பல வீதிகள் பொலிஸாரால் மூடப்பட்டுள்ளன.
இதன்படி, தியத்த உயன சந்தியில் இருந்து (பொல்துவ சந்தி) ஜயந்திபுர சந்தி வரையும், ஜயந்திபுர சந்தியில் இருந்து கியன்ஹாம் சந்தி (டென்சில் கொப்பேகடுவ வீதி) வரையும் நாடாளுமன்ற பிரவேச வீதிகள் இன்றும் நாளையும் மூடப்பட்டிருக்கும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகள் காரணமாக, நாடாளுமன்றத்தைச் சூழவுள்ள வீதிகளில் பொதுமக்கள் போராட்டம் நடத்துவதால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களின் நடமாட்டத்துக்கு இடையூறு ஏற்படக்கூடும் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இதனால், எவ்வித இடையூறும் இன்றி நாடாளுமன்றத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்படும் என்பதால், குறித்த வீதிகள் இரு நாட்களுக்குத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், நாடாளுமன்ற வீதிக்குச் செல்லும் குறுக்கு வீிதிகளும் இன்றும் நாளையும் மூடப்பட்டிருக்கும். மாற்று வழிகள் இல்லாத அந்த எல்லைக்குள் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்திப் பயணிக்க முடியும் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, நாடாளுமன்ற நுழைவு வீதிகள் மூடப்பட்டுள்ளதால் பத்தரமுல்லையைச் சூழவுள்ள வீதிகளில் இன்று கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பத்தரமுல்லை, பெலவத்த மற்றும் தலவத்துகொட ஆகிய பகுதிகளில் இவ்வாறு கடுமையான வாகன நெரிசல் நிலவுகின்றது.
#SriLankaNews
Leave a comment