இன்றிலிருந்து வகுப்புகளுக்கு தடை!! – மீறினால் சிறை!!

Private Tuition Classes Banned

இன்றைய தினத்திலிருந்து 2021 க.பொ.த. உயர்தரப்பரீட்சை இலக்காகக் கொண்டு பிரத்தியேக வகுப்புகள் மற்றும் பயிற்சிகளை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாடம் சார்ந்த கருத்தரங்குகள் அல்லது வகுப்புகளை ஏற்பாடு செய்தல், நடத்துதல் , பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுதல் ,விநியோகித்தல் என்பவை தடை செய்யப்பட்டுள்ளன.

மேலும் ஐந்து நாட்களுக்கு முன்னர் மாதிரி வினாத்தாள்களை வழங்குவதாக கூறி மின்னணு ஊடகங்கள் ,சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் மூலம் விநியோகம் மற்றும் விளம்பரம் செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

பரீட்சை பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில் ஒரு நபர் அல்லது ஒரு நிறுவனம் விதிமுறைகளை மீறினால் அருகில் உள்ள பொலிஸ் நிலையம் அல்லது பரீட்சைகள் திணைக்களத்திற்கு முறைப்பாடு அளிக்கலாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

 

Exit mobile version