பொலிஸ் அதிகாரியினால் செய்யப்பட்ட விருந்தில் கடும் மோதல்
கொழும்பின் புறநகர் பகுதியான கொஸ்வத்த பிரதேசத்தில் மதுபான விருந்து ஒன்றின் போது பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொஸ்வத்தை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
கொஸ்வத்தை பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் கடந்த 13ஆம் திகதி ஓய்வுபெற்ற பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கொஸ்வத்தை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பல பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் மதுபான விருந்து வைத்துள்ளார்.
இந்த நிலையில் மது அருந்தும் போது ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை மேலும் கொஸ்வத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments are closed.