முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம், குற்றப்புலனாய்வு பிரிவினர், நேற்று மாலை வாக்குமூலம் பதிவுசெய்தனர்.
மே 09 ஆம் திகதி மைனா கோகம, கோட்டா கோகம போராட்டக்காரர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பிலேயே வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு, அலரிமாளிகை வந்திருந்தவர்களே, போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இச் சம்பவம் தொடர்பில் இதுவரை இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சில எம்.பிக்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
#SriLankaNews