கடன் மறுசீரமைப்பிற்கு பூரண ஆதரவு : சீனா உறுதி

24 66359fb74ef82

கடன் மறுசீரமைப்பிற்கு பூரண ஆதரவு : சீனா உறுதி

இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கும் பொருளாதார சவால்களை எதிர்நோக்குவதற்கும் பூரண ஆதரவு வழங்கப்படும் என சீனா தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான சீனத்தூதுவர் ஸீ ஷென்ஹெரங் இந்த உறுதிமொழியை பிரதமர் தினேஸ் குணவர்தனவிடம் வழங்கியுள்ளார்.

பொருளாதார நெருக்கடி நிலைமையை வெற்றிகொள்ள இலங்கை எடுத்து வரும் முயற்சிகள் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் பிரதமரின் சீன விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைகளை விரைவில் நடைமுறைப்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version