சீனத் தூதுவர் – மஹிந்த சந்திப்பு

image b9d39c81be

இலங்கைக்கான சீனத் தூதுவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு இடையில் நேற்று (14) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது சீனாவின் கொரோனா பொதுக் கொள்கை அனுமதிக்கும் பட்சத்தில் சீன சுற்றுலாப் பயணிகள் விரைவில் இலங்கைக்கு வரத் தொடங்குவார்கள் என இலங்கைக்கான சீனத் தூதுவர் கி சென்ஹொங் மஹிந்த ராஜபக்சவுக்கு உறுதியளித்துள்ளார்.

இதன்போது இருவரும் இலங்கைக்கும் சீன மக்கள் குடியரசிற்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

#SriLankaNews

Exit mobile version