18 3
இலங்கைசெய்திகள்

ட்ரம்ப் செய்தது தவறு….! எச்சரிக்கை விடுத்த சீனா

Share

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) வரியை உயர்த்தி தவறு செய்துவிட்டார் என ட்ரம்புக்கு எதிராக சீனா எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவுக்குள் வரும் சட்டவிரோத குடியேறிகள் மற்றும் போதைப்பொருட்களை காரணம் காட்டி கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

அதேநேரம், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதி விதித்து உத்தரவிட்டுள்ளார். அத்துடன், இந்த வரி விதிப்புகள் நெருக்கடிகள் தணியும் வரை தொடரும் என்று வெள்ளை மாளிகையும் அறிவித்துள்ளது.

இதனைதொடர்ந்து அமெரிக்க பொருட்களுக்கு கனடாவும் 25 சதவீதம் வரி விதித்ததுடன் மெக்சிகோ விரைவில் பதிலடி கொடுப்போம் என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“அமெரிக்காவின் வரிவிதிப்பு சர்வதேச வர்த்தக விதிமுறைகளை மீறுவதாக உள்ளது.

அமெரிக்கவின் இந்த செயல் இரண்டு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமையும் என்றும் அமெரிக்கா தனது தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும்”என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உலக வர்த்தக கூட்டமைப்பில் (WTO) இதுதொடர்பாக வழக்கு தொடரவுள்ளதாகவும் சீனா எச்சரித்துள்ளது.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...