tamilni 115 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை தொடர்பில் சீனாவின் அறிவிப்பு

Share

இலங்கை தொடர்பில் சீனாவின் அறிவிப்பு

சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியான, எக்ஸிம் வங்கி, கடந்த மாதம் இலங்கையுடன் சீனா தொடர்பான கடன்களை அகற்றுவதற்கான பூர்வாங்க ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீய்ஜிங்கில் வழக்கமான செய்தி மாநாட்டின் போது, சீனாவின் வெளியுறவு அமைச்சகம் இதனை நேற்று அறிவித்துள்ளது.

கடந்த செப்டெம்பரின் பிற்பகுதியில், சீனா EXIM வங்கி, உத்தியோகபூர்வ கடன் கொடுனர் என்ற வகையில், கடன்களை அகற்றுவது தொடர்பாக இலங்கையுடன் பூர்வாங்க ஒப்பந்தத்தை எட்டியது என்று அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறியுள்ளார். எனினும் அது தொடர்பான விபரங்களை வெளியிடவில்லை.

இந்த நிலையில் சீனாவின் இந்த அறிவிப்புக்கு EXIM வங்கியோ அல்லது இலங்கையின் நிதி அமைச்சகமோ உடனடியாக பதிலளிக்கவில்லை என்று ரொயட்டர் தெரிவித்துள்ளது.

அரசாங்கத் தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கை சீனாவின் EXIM க்கு $4.1 பில்லியன் அல்லது நாட்டின் வெளிநாட்டு நாணயக் கடனில் 11% கடன்பட்டுள்ளது.

இதேவேளை நட்பான அண்டை நாடாகவும், நேர்மையான நண்பராகவும், சீனா, அதன் திறன்களுக்குள் உதவிகளை வழங்கி வருகிறது” என்று வாங் நேற்றைய செய்தி மாநாட்டில் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...

27
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை: அணு ஆயுதத் திட்டத்தை முடக்க டிரம்ப் அழுத்தம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மூன்றாவது சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தைகள்...