தமிழர்களாகிய நாம் தடைகளை உடைத்தெறிந்து எமது உரிமைகளை வெல்வதற்கு மூன்றாம் நபரான சீனா தடையாக அமைவதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகம் ஒன்றிற்கு கருத்து வெளியிட்ட அவர்,
எங்கள் அரசியல் அபிலாசை என்பது ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை அடிப்படையாக கொண்டது. இந்த இரண்டு கருத்துக்களும் சீனாவிற்கு அந்நியமான விடயங்கள்.
எங்கள் அரசியல் உரிமைகளை மனிதஉரிமைகள் மற்றும் ஜனநாயக கொள்கைகளின் அடிப்படையில் வெல்வதற்கு சீனாவின் செல்வாக்கு முட்டுக்கட்டையாக விளங்கும் .
சீனா எங்கள் பகுதிகளில் கால்பதிப்பதை நாங்கள் விருப்பாததற்கு இது ஒரு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது காரணம் நாங்கள் தென்சீன கடற்பகுதியில் இல்லை .தென்சீன கடற்பகுதியில் இருந்திருந்தால் நாங்கள் சீனாவின் நியாயபூர்வமான பாதுகாப்பு கரிசனைகளை அங்கீகரித்திருப்போம்,ஆனால் நாங்கள் இந்து சமுத்திர பகுதியில் இருக்கின்றோம்.
இந்தியாவின் நியாயபூர்வமான பாதுகாப்பு கரிசனைகளை நியாப்படுத்துவதற்காக ஏற்றுக்கொள்வதற்காக பாதுகாப்பதற்காக எங்களை யாரும் குற்றம்சொல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
சீனா இந்தியாவுடன் நட்புறவு பாராட்டும் நாடு இல்லை.இதன் காரணமாக இந்திய கரைக்கு மிக அருகில் உள்ள வடகிழக்கில் சீனா காலூன்ற அனுமதிப்பது.இந்தியாவிற்கு எதிராக மேலும் பகைமை நடவடிக்கைகளில் சீனா ஈடுபடுவதற்கு அனுமதிப்பதற்கு சமமானது. என்றார்.
#SrilankaNews
Leave a comment