இலங்கைசெய்திகள்

தந்தையால் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட பிள்ளைகள்

24 66179e5949742
Share

தந்தையால் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட பிள்ளைகள்

திருகோணமலை (Trincomalee) தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இரண்டு பிள்ளைகளை தவறான நடத்தைக்கு உட்படுத்தியமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பிள்ளைகளின் தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தம்பலகாமம் சிராஜ் நகர் பகுதியில் வசித்து வரும் முகமது சனுஷ் என்ற 28 வயதுடைய நபரையே இவ்வாறு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மனைவி வெளிநாட்டுக்குச் சென்றிருந்த நிலையில் 2 பிள்ளைகளையும் தனது கணவனின் கண்காணிப்பில் விட்டுச் சென்றுள்ள போதே இரு சிறுவர்களும் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இரு சிறுவர்களிடமும் வாக்குமூலம் பெற்றதை அடுத்து சந்தேக நபரை கைது செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கந்தளாய் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், குறித்த தந்தையால் தவறான நடத்தைக்குட்பட்ட இரண்டு சிறுவர்களும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...