tamilni 308 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டை உலுக்கிய அம்பாறை பகுதியின் கொடூர கொலை: பிரேத பரிசோதனை தகவல்

Share

நாட்டை உலுக்கிய அம்பாறை பகுதியின் கொடூர கொலை: பிரேத பரிசோதனை தகவல்

அம்பாறை – பெரியநீலாவணை பகுதியில் தந்தையால் வெட்டி கொலை செய்யப்பட்ட இரண்டு பிள்ளைகளின் பிரேத பரிசோதனை இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த பிரேத பரிசோதனை அம்பாறை ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் விசேட தேவையுடைய 29 வயதுடைய ஆண் ஒருவரும் 15 வயதுடைய சிறுமி ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.

அம்பாறை – பெரியநீலாவணை – பாக்கியதுல் சாலியா பகுதியில் 63 வயதான தந்தையொருவர் தனது இரண்டு பிள்ளைகளையும் கொலை செய்துவிட்டு தனது உயிரையும் மாய்த்துக் கொள்ள முயற்சித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், தந்தை கல்முனை ஆதார வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கொலை சம்பவத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவராத நிலையில், பெரியநீலாவணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026 ஜனவரியில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் டொலராக உயர்வு!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்த அறிக்கையை இலங்கை மத்திய...

12 3
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் புதிய அரசியலமைப்பு முயற்சி: 30 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றித் தொடரும் பயணம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி, பல...

11 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மகளின் நினைவாக இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய தந்தை!

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் காணியற்ற ஏழைக் குடும்பங்களுக்காக, தனது 16 வயது மகளின் நினைவாக...

10 4
உலகம்செய்திகள்

ஈரான் மீதான கூட்டுத் தாக்குதல்: பதற்றத்தைக் குறைக்க இந்தியா வலியுறுத்தல்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானில் உள்ள ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ள...