பாட்டியுடன் இருந்த குழந்தையை துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு பயமுறுத்தி கடத்தி சென்றுள்ளார்.
குழந்தையின் தந்தையான ஹொரணை நீலக என்பவரினால் இந்த கடத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் கொலை உட்பட பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கூரிய ஆயுதத்தால் தனது மனைவியின் கைகால்களை துண்டுத் துண்டாக வெட்டி பலத்த காயம் ஏற்படுத்தியிருந்தார்.
இச்சம்பவத்தின் பின்னர் அவரது குழந்தை மாமியாரின் பாதுகாப்பில் இருந்த நிலையில் நாளை குழந்தைகள் பராமரிப்பு மையத்திற்கு மாற்றப்பட இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#SrilankaNEws