3 25
இலங்கைசெய்திகள்

முதலமைச்சர் வேட்பாளராக சுமந்திரனா..! சி.வி.கே. கொடுத்த பதில்

Share

நடப்பதற்குச் சாத்தியமே இல்லாத மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் சுமந்திரனிடம் கேள்வி கேட்டபோதே சுமந்திரன் தானே முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடப் போவதாகப் பதிலடி கொடுத்துள்ளார் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் சுமந்திரன் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளமை தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில் நேற்று(19) நடத்திய ஊடக சந்திப்பின்போது சிவஞானத்திடம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் தெரிவித்ததாவது, மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தயவு செய்து இப்போது கதைக்காதீர்கள். ஏனெனில் அது இப்போது மேசையிலும் இல்லை.

குறிப்பாக இந்த வருடம் அந்தத் தேர்தல் நடைபெறாது. ஏனெனில் அதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. ஆனாலும் மாகாண சபைத் தேர்தல் ஒன்று வருகின்றபோது அதில் நாங்கள் ஒருவரை நிறுத்துவோம்.

மாகாண சபைத் தேர்தல் வரட்டும் பார்ப்போம். இல்லாத ஒன்றுக்கு ஏன் பெயர் வைக்கின்றார்கள். யாரை ஏமாற்றுகின்றார்கள்.

உண்மையில் மாகாண சபை தேர்தல் என்பது நடக்க வேண்டியதுதான். ஆனால் அது நடைபெறுவதற்கான சாத்தியங்கள் இல்லாத நிலையில் கூட ஒற்றுமையைக் குலைக்கும் சதி வேலைகள் தற்பொழுதே முன்னெடுக்கப்படுகின்றன.

குறிப்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் சுமந்திரனிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும்போதுதான் சுமந்திரன் தானே முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடப் போவதாகக் கூறியுள்ளார்.

எனினும், நடப்பதற்குச் சாத்தியமே இல்லாத மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் சுமந்திரனிடம் கேள்வி கேட்டபோதே சுமந்திரன் பதிலடி கொடுத்துள்ளார்.

ஆகவே, இப்போது அதைப் பற்றி பேசுவதில் அர்த்தம் இல்லை. அதையே திரும்பத் திரும்பப் பேசி குழப்ப வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...