கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கும்!!

chicken

எதிர்வரும் நீண்ட வார இறுதி விடுமுறை மற்றும் அடுத்த வாரத்தில் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள காரணத்தில் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கும் என்று இலங்கை கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் தெரிவித்தது.

திங்கட்கிழமை (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய  அந்த சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.

கோழி இறைச்சிக்கான தேவை அதிகரிப்பதால் ஒரு கிலோ கிராம் இறைச்சியின் விலை  1200 ரூபாய் முதல் 1400 ரூபாய் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Exit mobile version