tamilnibfb scaled
இலங்கைசெய்திகள்

கோழி இறைச்சி விலை அதிகரிப்பு! ஜனாதிபதி அனுமதி

Share

கோழி இறைச்சி விலை அதிகரிப்பு! ஜனாதிபதி அனுமதி

தொழில் துறைக்கு தேவையான கோழி இறைச்சியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 27ஆம் திகதி ஜனாதிபதியினால் நடத்தப்பட்ட வாழ்க்கைச் செலவு தொடர்பான விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறுகையில், சந்தையில் கோழி இறைச்சி விலை உயர்வால் மக்கள் எதிர்நோக்கும் இன்னல்களை குறைக்கும் வகையில் அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்த தீர்மானத்தின் மூலம் சந்தையில் கோழி இறைச்சி விலையை கட்டுப்படுத்தாவிட்டால் எதிர்காலத்தில் நுகர்வுக்காக கோழியை இறக்குமதி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன், எதிர்காலத்தில் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் நாட்டு மக்களுக்கு மலிவு விலையில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறும் விவசாய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

அதிக கோழி குஞ்சுகளை பொரிப்பதற்காக தாய் கோழிகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...