rtjy 14 scaled
இலங்கைசெய்திகள்

மண்டபம் அகதி முகாமில் தடுத்து நிறுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

Share

மண்டபம் அகதி முகாமில் தடுத்து நிறுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

இந்தியாவின் – தமிழ்நாட்டில் அமைந்துள்ள இராமநாதபுரம் – மண்டபம் அகதி முகாமிற்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் நிர்மலநாதன் சென்ற போது அவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

மண்டபம் அகதி முகாமில் உள்ள ஈழத்தமிழர்களை கடந்த வியாழக்கிழமை(26.09.2023) அன்று சந்திக்க சென்றிருந்த போதே அங்குள்ள அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாக மேலும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈழத்தமிழ் அகதிகளை சந்திப்பதற்கான வேண்டுகோள் தாயகத்தில் இருந்து விடுக்கப்பட்ட நிலையில் அவர் இந்த முயற்சியை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அகதிமுகாமில் உள்ள அதிகாரிகள் தடுத்து நிறுத்தியமையால் ஈழத்தமிழ் அகதிகளை சந்திப்பதற்கான முயற்சி முற்றுமுழுதாக நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான எந்த தகவலையும், தமிழக அரசு இதுவரையில் வெளியிடவில்லை.

எனினும் அங்குள்ள நடைமுறைகளை பின்பற்றி சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினரை தடுத்து நிறுத்திய விடயமானது, ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியையும், விசனத்தையும் உண்டாக்கியுள்ளது.

Share
தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...