யாழில் துவிச்சக்கர வண்டிகளுக்கு கட்டணம் நீக்கம்!

20220822 163126

யாழ். நகர் பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளுக்கு அறவிடப்பட்டு வந்த கட்டணங்கள் நேற்று(23) முதல் நீக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் அறிவித்துள்ளார்.

யாழ்.நகர் மத்தி பகுதிகளில் உள்ள வீதிகளில் வாகனங்களை நிறுத்துபவர்களிடமிருந்து வாகன தரிப்பிட கட்டணங்கள் அறவிட ஒப்பந்தக்காரர்களுக்கான ஒப்பந்தம் யாழ்.மாநகர சபையினால் வழங்கப்பட்டு இருந்தது. வாகனங்கள் , மோட்டார் சைக்கிள்கள் , துவிச்சக்கர வண்டிகள் என்பவற்றுக்கு தரிப்பிடக்கட்டணம் அறவிடப்பட்டு வந்தது.

துவிச்சக்கர வண்டிகளுக்கான தரிப்பிட கட்டணங்களை அறவிட வேண்டாம் என பல தரப்பினராலும் முன் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக துவிச்சக்கர வண்டிக்கான கட்டணங்கள் அறவீடு செய்வதை தவிர்க்குமாறு முதல்வரால் ஒப்பந்தக்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version