பிள்ளையான் நாட்டை விட்டு வெளியேறும் நிலை

rtjy 168

பிள்ளையான் செய்த குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொள்ளவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டால், சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பின்னணி தொடர்பிலும் அவர் கருத்து தெரிவிக்க நேரிடும் என பிரித்தானியாவின் அரசியல் ஆய்வாளர் தி. திபாகரன் தெரிவித்தார்.

மேலும், அவர் அசாத் மௌலானவை போல் நாட்டை விட்டு வெளியேறும் நிலையும் ஏற்படக்கூடும் என கூறினார்.

சனல் 4 ஆவணப்படத்தின் மூலம் பரபரப்பாக பேசப்பட்ட அசாத் மௌலான, பிள்ளையானை விட்டு பிரிந்து சென்ற விடயம் தொடர்பில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், இலங்கையில் காலம்காலமாக படுகொலை கலாச்சாரம் காணப்படுவதாகவும், அதற்கான தீர்வுகள் எதுவும் இதுவரையில் எட்டப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

Exit mobile version