tamilnih 98 scaled
இலங்கைசெய்திகள்

சன்ன ஜயசுமண ஜனாதிபதியுடன் இணைத்துக்கொள்ள முயற்சி

Share

சன்ன ஜயசுமண ஜனாதிபதியுடன் இணைத்துக்கொள்ள முயற்சி

முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்வதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளார்.

டலஸ் அழகப்பெரும தலைமையில் பொதுஜன பெரமுன அதிருப்தியாளர்கள் குழு, நிதஹஸ் ஜனதா சபாவை உருவாக்கிய போது சன்ன ஜயசுமணவும் அதில் உள்ளடங்கியிருந்தார்.

அதன் பின்னர் ஜீ.எல். பீரிஸ் தலைமையில் சன்ன ஜயசுமண உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நிதஹஸ் ஜனதா சபாவை விட்டும் விலகி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டது.

எனினும் அங்கு சிறுபான்மைக் கட்சித் தலைவர்களான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியூதீன் ஆகியோரின் கடுமையான எதிர்ப்பு காரணமாக சஜித் பிரேமதாச உள்ளிட்டோர் சன்ன ஜயசுமணவை ஒதுக்கி நடக்கத் தலைப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ள சன்ன ஜயசுமண தற்போது ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியிலும் அரசாங்கத்திலும் இணைந்து கொள்வதற்கு தூதுவிடத் தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....