நெல் அறுவடை இடம்பெறுவதனால் அடுத்த வாரம் முதல் அரிசியின் விலை சரிவடையும் என அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது
கடந்த வாரங்களில் அரிசியின் விலையில் அதிகரிப்பு காணப்பட்டது. நெல் தட்டுப்பாடு மற்றும் நெல்லின் விலை அதிகரித்தமை காரணமாக இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டது.
ஆனால் தற்போது வவுனியா மற்றும் வடமேல் மாகாணங்களில் நெல் அறுவடை ஆரம்பமாகியுள்ள நிலையில் அரிசியின் விலை குறைவடையும் என எதிர்பார்ப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் பி.கே.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
#srilankanews
Leave a comment