நாட்டின் பொருளாதார தளம்பலில் மாற்றம்!

Nandalal Weerasinghe

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பதற்கு பல காரணங்கள் பிரதானமாக பங்களித்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பொருளாதார நெருக்கடிக்கு நாடு திரும்புவதைத் தடுப்பதற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு சீர்திருத்தங்கள் 2023 வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக இன்று (15) கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த நாட்டின் பொருளாதாரம் தற்போது மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்ட நிதிக் கொள்கைகளினால் ஓரளவு ஸ்திரமான நிலையில் காணப்படுவதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version