தேசிய அடையாள அட்டையைப் பெறுவதற்கான புதிய கட்டணங்கள் நவம்பர் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், முதன்முறையாக தேசிய அடையாள அட்டையைப் பெறுவதற்கு 200 ரூபா கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.
தேசிய அடையாள அட்டையின் நகலைப் பெறுவதற்கு 1000 ரூபா கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.
தேசிய அடையாள அட்டையின் திருத்தப்பட்ட பிரதியை வழங்குவதற்கு 500 ரூபாவும்,
காலாவதியான தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக புதிய தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு 200 ரூபாவும் அறவிடப்படும் – என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews