சாரதி அனுமதிப்பத்திர கட்டணங்களில் மாற்றம்!

1659756301 1659753796 drive L

சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் சாரதி அனுமதி பத்திரத்தை புதுப்பிப்பதற்கான கட்டணங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் விகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன, அதிவிசேட வர்த்தமானி மூலம் சாதாரண மற்றும் ஒரே நாள் சேவையின் கீழ் வரும் சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்களை திருத்தியமைத்துள்ளார்.

இதன் கீழ், 2009 மார்ச் 26 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 2009 ஆம் ஆண்டின் இலக்கம் 01 ஆம் இலக்க சாரதி அனுமதிப்பத்திர ஒழுங்குமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

புதிய அதிவிசேட வர்த்தமானியின் அடிப்படையில், ஒரு வகுப்பிற்கான கற்றல் அனுமதி மற்றும் புதிய சாரதி உரிமத்திற்கான விண்ணப்ப கட்டணம், சாதாரண சேவையின் கீழ் 2,500 ரூபா, ஒரு நாள் சேவையின் கீழ் 3,500. ரூபாவாக திருத்தப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் இரண்டு வகுப்புகளுக்கு சாதாரண சேவையின் கீழ் கட்டணம் 3,000 ரூபா மற்றும் ஒரே நாள் சேவைக்கு 4,000 ரூபாவாக அறவிடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version