சந்திரிகா 1 1
அரசியல்இலங்கைசெய்திகள்

“அரசியல் தீர்வைக் கண்டிருந்தால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிராது”

Share

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் கண்டிருந்தால் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை இந்தளவு தூரத்துக்குச் சென்றிருக்காது என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தற்போதைய சூழலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகவேண்டும் எனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசியல் நலன்கருதிச் செயற்படாமல் சர்வதேசத்துடன் இணைந்து பணியாற்றவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

‘இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் கண்டிருந்தால் இப்போதைய பொருளாதார நெருக்கடியை தவிர்த்திருக்க முடியுமல்லவா?’ என்று கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எமது ஆட்சிக் காலத்தில் தீர்வை வழங்க நாம் முன்னெடுத்த நடவடிக்கைகளை ஒரு பக்கத்தில் விடுதலைப்புலிகளும் மறுபக்கத்தில் அன்றைய எதிர்க்கட்சியினரும் குழப்பியடித்தார்கள். அதன் பின்னரும் தீர்வை வழங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் இருந்தன. நல்லாட்சி அரசின் காலத்தில் கூட தீர்வு சம்பந்தமான விடயத்தில் முன்னேற்றகரமாக நகர்வுகள் இருந்தாலும், இறுதிக் கட்டத்தை அடைய முடியாமல் போய்விட்டது. இதற்கு நல்லாட்சி அரசில் அங்கம் வகித்த சகலரும் பொறுப்புக்கூற வேண்டும்.

ராஜபக்சக்கள் போரை முடிவுக்கு கொண்டு வந்து, தாமே ராஜாக்கள் ஆக வேண்டும் என்று கனவு கண்டு அதைச் சாதித்தார்களே தவிர, தீர்வு விடயத்தில் துளியளவும் அக்கறை செலுத்தவில்லை. போரில் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் விடயத்தில் அசமந்தமாகவே ராஜபக்சக்கள் செயற்பட்டனர்.

இன்று பொருளாதாரம் நெருக்கடி உச்சமடைந்ததையடுத்து ராஜபக்சக்களுக்கு எதிராகவே சிங்கள மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர். இந்தநிலையில் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ச விலகியதையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் அந்தப் பதவியைப் பொறுப்பேற்றுள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக இருந்த இந்த அரசின் தலைவரான ஜனாதிபதி கோட்டாபய அனைத்து மக்களின் வேண்டுகோளையும் புறம்தள்ளி பதவியில் இருக்கின்றார். ஜனாதிபதிக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராடும் மாணவர்கள் மீது பொலிஸார் மனிதாபிமானம் பாராது கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசி அவர்களைத் தாக்கி வருகின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் நாட்டை இன்னும் மோசமான நிலைமைக்கே இட்டுச் செல்லும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடன் பதவி விலகவேண்டும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசியல் நலன் கருதிச் செயற்படாமல் அனைத்து இன மக்களின் நலன்கருதி சர்வதேசத்துடன் ஒன்றிணைந்து தீர்மானங்களை எடுக்கவேண்டும். அப்போதுதான் இந்தப் பொருளாதார நெருக்கடி தீர்வைக் காண முடியும்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமாகமவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே மோதல்: 19 வயது இளைஞன் மரணம்; ஐவர் கைது!

ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில்...

world 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜும்ஆ பிரசங்கங்களின் போது நிதானத்தைப் பேணுமாறு உலமாக்களுக்கு அறிவுறுத்தல்!

நாட்டின் தற்போதைய சூழல் மற்றும் சர்வதேச விவகாரங்களைக் கருத்திற்கொண்டு, ஜும்ஆ பிரசங்கங்களின் போது கதீப்மார்கள் மற்றும்...

world 55
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு விசேட போக்குவரத்துத் திட்டம் ஆரம்பம்: கொழும்பிலிருந்து 2,300 மேலதிக பேருந்துகள் சேவையில்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக விசேட...

world 54
செய்திகள்இலங்கை

நெதன்யாகு மீதான ஊழல் வழக்கு மீண்டும் தொடக்கம்; ஈரானின் கடும் விமர்சனம்!

இஸ்ரேலில் ஈரான் உடனான போர் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த அவசரநிலை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...