சிரேஷ்ட ஆலோசகராக சந்திரிகா! – ஜனாதிபதியால் நியமனம்

chandrika kumaratunga

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையிலான உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தேசிய கூட்டு பொறிமுறையின் சிரேஷ்ட ஆலோசகராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியின் முதலாவது கூட்டம் அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் இடம்பெற்றதுடன், சிரேஷ்ட ஆலோசகராக திருமதி சந்திரிகா குமாரதுங்கவும் கலந்துகொண்டார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, தற்போதைய சூழ்நிலையில் உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதிப்படுத்துவது அவசர தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக இருப்பதால், அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் வேலைத்திட்டத்தின் சிரேஷ்ட ஆலோசகராக செயற்பட சம்மதித்ததாக தெரிவித்தார்.

#SriLankaNews

Exit mobile version