சில பிரதேசங்களில் இடியுடன் மழை பெய்யகூடிய சாத்தியம்!

Rain in Uttar Pradesh 1200

சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடக்கு மாகாணத்தில் காலை வேளையிலும் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், ஊவா, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

.

Exit mobile version