ஐசிசி விருதினை வென்று வரலாறு படைத்த இலங்கை வீராங்கனை

24 666d75d300df0

ஐசிசி விருதினை வென்று வரலாறு படைத்த இலங்கை வீராங்கனை

மிகவும் பெறுமதிவாய்ந்த ஐசிசி (ICC) மாதத்தின், அதிசிறந்த கிரிக்கெட் வீராங்னைக்கான விருதை இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித் தலைவி சமரி (Chamari Athapaththu) அத்தபத்து இரண்டாவது தடவையாக வென்று வரலாறு படைத்துள்ளார்.

அந்த வைகையில், அதிசிறந்த வீராங்கனைக்கான ஐசிசி மே மாத விருது பலத்த சவாலுக்கு மத்தியில் சமரி அத்தபத்தவுக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், மகளிர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலும் இலங்கை சார்பாக அதிக ஓட்டங்களைக் குவித்த வீராங்கனை என்ற பெருமையை சமரி அத்தபத்து பெற்றுள்ளார்.

மேலும், இதே விருதை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் சமரி அத்தபத்து வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version